செங்கல்பட்டு மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு குழு: போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார்
மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.
பாதுகாப்பு குழு
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூடுவாஞ்சேரியில் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு குழு என்ற தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குழுவை தொடர்புகொள்ள 7200102104 என்ற பிரத்யேக செல்போன் எண் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர் இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக அவர்கள் வீட்டுக்கு நேரடியாக போலீசார் சென்று அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வார்கள். மேலும் ஆதரவின்றி இருக்கும் முதியோர் இந்த எண்ணை தொடர்பு கொண்டால் அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
33 ரவுடிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக இதுவரை 33 ரவுடிகள் குண்டர் ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 66 பேர் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 67 கிலோ 375 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரவுடிகளை கட்டுப்படுத்தவும், கஞ்சா போன்ற போதைப் பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க தனி சிறப்பு குழு
செயல்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வியாபாரம் செய்த 210 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விற்பனை செய்த நபர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story