ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்: பி.வி.சிந்துவுக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து


ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்: பி.வி.சிந்துவுக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
x
தினத்தந்தி 2 Aug 2021 6:36 PM IST (Updated: 2 Aug 2021 6:36 PM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்: பி.வி.சிந்துவுக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து.

சென்னை,

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளின் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தின் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள். தனிநபர் பிரிவில் தொடர்ந்து இரு முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சிந்து. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அடுத்து வரும் போட்டிகளில் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியாவை முன்னேற்றுவதற்கு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story