‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடை செய்ய வல்லுனர் குழு பரிந்துரைப்படி புதிய சட்டம்


‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடை செய்ய வல்லுனர் குழு பரிந்துரைப்படி புதிய சட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2021 8:15 PM IST (Updated: 5 Aug 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடை செய்ய வல்லுனர் குழு பரிந்துரைப்படி புதிய சட்டம் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் யோசனை.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘ஆன்லைன்’ சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. ‘ஆன்லைன்’ ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும். ‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடை செய்ய இன்றைய நிலையில் இதுதான் ஒரே வழியாகும். ‘ஆன்லைன்’ சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தாலும் கூட எந்த பயனும் கிடைக்காது. ‘ஆன்லைன்’ சூதாட்டத் தடை சட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, புதிய சட்டம் இயற்றுவது தான் சரியான தீர்வு ஆகும்.

எனவே, சட்ட வல்லுனர்கள், தகவல் தொழில்நுட்பச் சட்ட வல்லுனர்கள் அடங்கிய வல்லுனர் குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரை அறிக்கையைப் பெற்று அதனடிப்படையில் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

Next Story