கொரோனா பாதிப்பு மீண்டும் 100-ஐ தாண்டியது


கொரோனா பாதிப்பு மீண்டும் 100-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 14 Aug 2021 3:59 AM IST (Updated: 14 Aug 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 100-யை தாண்டியது.

சேலம், ஆக.14-
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 100-யை தாண்டியது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 26-ந் தேதி கொரோனாவுக்கு 102 பேர் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு தொடர்ந்து 100-க்கும் கீழ் இருந்தது. இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் 100-ஐ தாண்டியது.
அதாவது 120 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 73 பேரும், ஆத்தூர் பகுதியில் 13 பேரும், நகராட்சி பகுதிகளில் 8 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் வந்த தலா ஒருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருவர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 86 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 881 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு ஆஸ்பத்திரியில் பலியானார். இவர் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,603 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story