பென்னாகரம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
பென்னாகரம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே வெவ்வேறு இடங்களில் பெயிண்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெயிண்டர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). இவர் பெங்களூருவில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர்
அதேபோல் பென்னாகரம் அருேக உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (43). ஆட்டோ டிரைவர். கடந்த சில மாதங்களாக வேலைகள் இல்லாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======
Related Tags :
Next Story