கார் விபத்தில் 2 பேர் பலி
கோவை அருகே கார் விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
கோவை
கோவை அருகே கார் விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
காரில் சென்றனர்
கோவை அருகே சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 70), இவரது உறவினர் நிதிஷ் ராகுல் (21). இவர்கள் 2 பேரும் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள காரில் சென்றனர்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று இரவு இவர்கள் காரில் சூலூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
2 பேர் பலி
பட்டணம்புதூர் அருகே எல் அண்டு பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாரதவிதமாக கார் மீது மோதிதாக கூறப்படுகிறது.
இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த கந்தசாமி, நிதிஷ் ராகுல் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story