பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு மும்முரம்
கோத்தகிரி வட்டார வள மையம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரி வட்டார வள மையம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி, முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வீடு, வீடாக நேரில் சென்று கணக்கெடுத்து, குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
மேலும் குழந்தைகளை கல்வி பயில வைப்பதன் அவசியம் குறித்து பெற்றோருக்கு அறிவுரை அளிக்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலாமல் நின்ற மாணவர்களை மேல்நிலைப்பள்ளி, தொழில் பயிற்சி நிலையம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story