திருவள்ளூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


திருவள்ளூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2021 12:43 PM IST (Updated: 18 Dec 2021 12:43 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பி.வி.ரமணா, திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், அரி, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக நேற்று திருவள்ளூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது, துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

Next Story