ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி: மும்பை பங்குச்சந்தை கடும் சரிவு


ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி: மும்பை பங்குச்சந்தை கடும் சரிவு
x
தினத்தந்தி 24 Feb 2022 5:48 PM IST (Updated: 24 Feb 2022 6:31 PM IST)
t-max-icont-min-icon

ரஷியா-உக்ரைன் போர் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் சரிவடைந்தது.

மும்பை,

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரஷிய படைகளில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே சமயம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருப்பது வர்த்தக சந்தையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் சரிவடைந்தது.

இன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் சரிவடைந்து 54,529 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 815 புள்ளிகள் குறைந்து, 16,247 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Next Story