தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி ஸ்ரீரங்கம் 3-வது வார்டு கொள்ளிடம் சாலை வசந்தம் நகர் , சக்தி நகர் பகுதிகளில் மதில் சுவர் ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயில் நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலசுப்பிரமணியம், கீழவாசல், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், நாகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சூக்லாம்பட்டியிலிருந்து நாகநல்லூர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சூக்லாம்பட்டி, திருச்சி.
திருச்சி மாவட்டம, ஸ்ரீரங்கம் தாலுகா, அந்தநல்லூர் ஒன்றியம், பெருகமணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், இப்பகுதி பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பழையூர், திருச்சி.
நோய் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாய் மூகாம்பிகை நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவு நீர் வாய்க்காலில் மண் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், தாய் மூகாம்பிகை நகர், திருச்சி.
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படுமா?
திருச்சி மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள மேலபுலிவார் ரோடு கீழபுலிவார் ரோடு ஹேலிகிராஸ் எதிர்புறம், ஜோசப் கல்லூரி எதிர்புறம் உள்ள சாலைகளில் பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் உள்ள வேகத்தடைகள் வர்ணம் பூசாமலும், ரிப்ளக்டர் இல்லாமலும் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆனந்தராஜ், காட்டூர், திருச்சி.
Related Tags :
Next Story