தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் சாவு + "||" + Death of vaccinated health worker in Telangana

தெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் சாவு

தெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் சாவு
தெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழந்தார்.
ஐதராபாத், 

தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் 42 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனே மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டது தெரிய வந்தது.

இதுபற்றி மாநில பொது சுகாதார இயக்குனர் ஜி.சீனிவாசராவ் கூறுகையில், “அவரது சாவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்பது ஆரம்ப கண்டுபிடிப்புகளில் தெரியவந்துள்ளது” என தெரிவித்தார்.

இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகு இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் 6-8 ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறப்பு
தெலுங்கானாவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2. தெலுங்கானாவில் போலீஸ், பாதுகாப்பு படையினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி
தெலுங்கானாவில் போலீஸ், பாதுகாப்பு படையினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
3. தெலங்கானாவில் கொரோனா மீட்பு விகிதம் 96.99 ஆக உயர்வு
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. தெலுங்கானாவில் 5 பேர் கொண்ட மத்திய குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது
தெலுங்கானாவில் 5 பேர் கொண்ட மத்திய குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது.
5. தெலுங்கானா வெள்ள மீட்பு பணியில் உதவ ராணுவத்துக்கு அழைப்பு
தெலுங்கானா வெள்ள மீட்பு பணியில் உதவ ராணுவத்துக்கு தெலுங்கானா மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.