தேசிய செய்திகள்

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது + "||" + Delhi reports 18,043 new #COVID19 cases, 20,293 discharges and 448 deaths in the last 24 hours.

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
டெல்லியில் இன்று மேலும் 18,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இன்று மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 18,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,12,989 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 448 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,414 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 20,293 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,05,983 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 89,592 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு
கேரளாவில் 3 பேருக்கு உருமாறிய வகையை சேர்ந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. பிரேசிலில் புதிதாக 41,878 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 899 பேர் பலி
பிரேசிலில் உருமாறிய கொரோனா பரவி வருவதால் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
3. தமிழகத்தில் மேலும் 7,427- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 189 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. ஆந்திராவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது
ஆந்திராவில் நேற்று 5,646- பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு அணிக்கை 2, 620 ஆக சரிந்துள்ளது.
5. டெல்லியில் கொரோனாவுக்கு போலி மருந்து: 2 டாக்டர்கள் உள்பட 10 பேர் கைது
டெல்லியில் கொரோனாவுக்கு போலி மருந்து தயாரித்த 2 டாக்டர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.