ஆந்திராவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - அம்மாநில அரசு அறிவிப்பு + "||" + Curfew imposed in Andhra Pradesh extended till the end of May, says Chief Minister's Office
ஆந்திராவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - அம்மாநில அரசு அறிவிப்பு
ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை இதுவரை 14 லட்சத்தை தாண்டி உள்ளது. அந்த மாநிலத்தில் 2.07 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர், கொரோனா பாதிப்பால் 9,271 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு பகுதி ஊரடங்கு உத்தரவு கடந்த மே 5-ம் தேதியில் இருந்து மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும், அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த 59 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி சென்றனர்.