காற்று மாசு: டெல்லிக்கு ரூ.18 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு


காற்று மாசு: டெல்லிக்கு ரூ.18 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு
x
தினத்தந்தி 3 Oct 2021 11:47 AM GMT (Updated: 3 Oct 2021 11:47 AM GMT)

என்சிஏபி திட்டத்தின் மூலம் டெல்லி 18.74 கோடி ரூபாய் நிதியை பெறவுள்ளது.

புதுடெல்லி,

வரும் 2024-ஆம் ஆண்டுக்குள், தேசிய அளவில் பிஎம் 2.5, பிஎம்10 ஆகிய நுண் துகள்கள் வகைகளை 20 லிருந்து 30 சதவிகிதம் வரை குறைப்பதற்காக தேசிய தூய்மை காற்று திட்டம் வகுக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டை கணக்கில் கொண்டு இது ஒப்பிடப்படவுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதி குறித்து உயர்மட்ட அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "என்சிஏபி திட்டத்தின் மூலம் டெல்லி 18.74 கோடி ரூபாய் நிதியை பெறவுள்ளது. 2019ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக டெல்லிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

நிர்ணயிக்கப்பட்ட தேசிய சுற்றுப்புற காற்றின் தர நிலையை பூர்த்தி செய்யாத 132 நகரங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. தேசிய காற்று கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் 2011-2015 காலகட்டத்தில் பெறப்பட்ட சுற்றுப்புற காற்றின் தரவின் அடிப்படையில் இந்த நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2017 ம் ஆண்டு டெல்லியில் பிஎம் 10 வகை நுண்துகள்கள், ஒரு மீட்டருக்கு சராசரியாக 240 மைக்ரோ கிராமாக இருந்தது. இதனை 2024ம் ஆண்டிற்குள் 168 மைக்ரோ கிராமாக குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Next Story