டெல்லியில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது

டெல்லியில் இன்று காலை முதல் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டெல்லி,

தேசிய தலைநகரான டெல்லியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த கனமழையால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வடிகட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையமானது டெல்லி தவிர, உத்தரபிரதேசம் மற்றும் அரியானாவிலும் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com