தேசிய செய்திகள்

பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம் + "||" + Attacks on civilians; Amitsha to visit Kashmir on 23rd

பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்

பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்
பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அடுத்து வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.


ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து காணப்பட்டது.  இந்த மாத முதல் வாரத்தில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர்.  அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர்.

இதன்பின்னர் கடந்த சில நாட்களில் பீகாரை சேர்ந்த 3 பேர் மற்றும் உ.பி.யை சேர்ந்த ஒருவர் என 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனால் பதற்றத்துடன் காணப்படும் காஷ்மீரில் ஏராளமான போலீசாரும், ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கிடையே, இன்று காலை பிரதமர் மோடியுடன் எல்லை பாதுகாப்பு குறித்து உள்துறை அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது.  இதனால், ஸ்ரீநகரில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி இன்று மத்தியபிரதேசத்துக்கு பயணம்; நாளை உத்தரபிரதேசம்..!
பிரதமர் மோடி பூர்வான்ச்சல் விரைவு சாலையை நாளை திறந்து வைக்க உள்ளார்.
2. சட்டசபை தேர்தல்; மம்தா பானர்ஜி இன்று கோவா பயணம்
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கோவாவிற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.
3. கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி மலைரெயிலில் பயணம் தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்டார்
கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி மலைரெயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்தார். பின்னர் தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்டு வைத்தார்.
4. அனகாவின் கலை பயணம் தொடங்கியது எப்படி?
‘‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்....’’ பாடலுக்கு அனகா ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது.
5. ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்தித்து பேசுகிறார்.