நாக பாம்பை நீர் ஊற்றி குளிப்பாட்டிய நபர்; வைரலான வீடியோ


நாக பாம்பை நீர் ஊற்றி குளிப்பாட்டிய நபர்; வைரலான வீடியோ
x

Image Courtesy:  Indiatoday

நாக பாம்பை குளியலறையில் வைத்து நபர் ஒருவர் நீர் ஊற்றி குளிப்பாட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.



புதுடெல்லி,


சமூக ஊடகங்களில் வெளிவர கூடிய பல விசயங்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையிலும், நம்ப முடியாத விசயங்களை கொண்டும் இருக்கும். அவற்றில் சமீபத்தில், பாம்பு ஒன்று பெண் வீசிய செருப்பை இரையென நினைத்து, கவ்வி கொண்டு சென்ற வீடியோ சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.

இதேபோன்று மற்றொரு வீடியோவும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை ஜிந்தகி குல்ஜார் ஹை என்பவர் பகிர்ந்து உள்ளார். அதில், நபர் ஒருவர் குளியலறையில் நிற்கிறார்.

கீழே நாக பாம்பு படமெடுத்தபடி காணப்படுகிறது. அதன் அருகே இருந்த வாளியில் உள்ள தண்ணீரை எடுத்து, அதன் தலை மேல் அந்த நபர் ஊற்றுகிறார். ஒரு கட்டத்தில் கோபத்தில், பல அடி நீளமுள்ள அந்த பாம்பு நீர் ஊற்ற தன்னை நோக்கி வரும் பிளாஸ்டிக் கோப்பையை கவ்வி கொள்கிறது.

சற்று விலகினாலும், அந்த நபரின் கையை பதம் பார்த்திருக்கும். ஒரு வேளை செல்ல கடியாக இருக்க கூடும். எனினும், அதற்கு விஷம் எடுக்கப்பட்டு இருப்பது பற்றிய விவரம் தெரிய வரவில்லை.

ஆனால், அதனை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து, தலை முதல் தண்ணீரை ஊற்றி, தொட்டு அந்த நபர் குளிப்பாட்டி விடுகிறார். அந்த பாம்பும் பொறுமையுடன் காணப்படுகிறது.

22 வினாடிகள் ஓட கூடிய இந்த வீடியோ 24 ஆயிரம் முறை பார்க்கப்பட்டு உள்ளது. இதுபற்றி ஒருவர், இந்த குளிரில் பாவம். அந்த பாம்பை குளிக்க வைக்கிறார் என ஒருவரும், தனது வாழ்க்கையை பற்றி கவலைப்படாத மனிதர் என மற்றொருவரும் விமர்சனங்களை பகிர்ந்து உள்ளனர். ஒருவர், தனது ஆர்வம் வெளிப்படும் வகையில் பாம்புக்கு ஜலதோஷம் பிடிக்கவில்லையா? என கேட்டுள்ளார்.

இதனையும் படிங்க: பாம்பின் கால் பாம்பறியும்...!! பயத்தில் பெண் வீசிய செருப்பை கவ்வி சென்ற பாம்பு; வைரலாகும் வீடியோ




Next Story