ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை: ஏர் இந்தியா முடிவு


ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை: ஏர் இந்தியா முடிவு
x

கோப்புப்படம்

ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதைத்தொடர்ந்து இந்த விமானங்களை புதுப்பிக்க குறிப்பாக கேபின்களை மாற்றியமைப்பதற்கு ஏர் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அதன்படி அனைத்து வகுப்புகளிலும் நவீன தலைமுறையை சார்ந்த இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் வகையில் கேபின் உள்புற வடிமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது.

4000 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,200 கோடி) செலவில் இந்த புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஏர் இந்தியா முடிவு செய்திருக்கிறது. இதற்காக லண்டனை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது.

'விகான்.ஏஐ' திட்டத்தின் கீழ், உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனத்திற்கு ஏற்ற தயாரிப்பு மற்றும் சேவையின் மிக உயர்ந்த தரத்தை அடைய ஏர் இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் கூறியுள்ளார்.


Next Story