கிரிக்கெட் விளையாட கற்றுக்கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி: முதல் பாலே சிக்சர் அடித்து விளாசிய ரோஜா


கிரிக்கெட் விளையாட கற்றுக்கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி: முதல் பாலே சிக்சர் அடித்து விளாசிய ரோஜா
x

ஜெகன் மோகனிடம் வலுக்கட்டாயமாக கிரிக்கெட் பேட்டைக் கொடுத்த ரோஜா, அவரையும் விளையாடச் செய்தார்.

ஐதராபாத்,

ஆந்திராவில் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜா, "ஆடுவோம் ஆந்திரா" நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகனுடன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெகன் மோகன் ரெட்டி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். அப்போது அருகில் இருந்த மந்திரியும் நடிகையுமான ரோஜாவை கிரிக்கெட் விளையாடச் சொன்னபோது, தனக்கு விளையாட தெரியாது என்று கூறினார். உடனே அவரை அழைத்த ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.

அதன் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவிடம் கிரிக்கெட் பேட்டை கொடுத்து தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். ஜெகனின் அறிவுறுத்தலின்படி, ரோஜா கிரிக்கெட் விளையாட ரெடியானதும் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார். முதலில் பேட்டை எப்படி பிடிப்பது என்றுகூட தெரியாமல் இருந்த ரோஜா இப்படி பந்தை விளாசியதை பார்த்த ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் மந்திரிகள் கைதட்டி ரோஜாவை பாராட்டினர்.

அதனைத் தொடர்ந்து ஜெகன் மோகனிடம் வலுக்கட்டாயமாக கிரிக்கெட் பேட்டைக் கொடுத்த ரோஜா, அவரையும் விளையாடச் செய்தார். பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வரை ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் "ஆடுவோம் ஆந்திரா" போட்டிகள் நடைபெற உள்ளன.

கிரிக்கெட் பேட்டை பிடித்திருக்கும் ரோஜா எப்படி பந்தை அடிப்பது என்று தெரியாமல் சிரமப்படுவதை பார்த்த ஜெகன் மோகன் ரெட்டி, உடனே பேட்டை எப்படி பிடிப்பது, பந்தை எப்படி எதிர்கொள்வது, கிரீஸில் எப்படி நிற்பது என்று ரோஜாவுக்கு கற்றுக்கொடுத்தார். ஜெகன் மோகன் ரெட்டி நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக்கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story