பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த 'டிரோன்': துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த ராணுவத்தினர்


பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த டிரோன்: துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த ராணுவத்தினர்
x

கோப்புப்படம்

காஷ்மீரில், ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டால் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ‘டிரோன்’ திரும்பி சென்றது.

ஜம்மு,

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பலோனியையொட்டி கிருஷ்ணா காதி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு 'டிரோன்' பறந்துவந்தது.

உடனே சுதாரித்த ராணுவத்தினர் அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதையடுத்து அந்த 'டிரோன்', பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதியில் ராணுவத்தினரும், போலீசாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story