பா.ஜனதா தலைவர்கள் போட்டி போட்டு சத்ரபதி சிவாஜியை அவமதித்து வருகின்றனர் - சஞ்சய் ராவத்


பா.ஜனதா தலைவர்கள் போட்டி போட்டு சத்ரபதி சிவாஜியை அவமதித்து வருகின்றனர் - சஞ்சய் ராவத்
x

பா.ஜனதா தலைவர்கள் போட்டி போட்டு சத்ரபதி சிவாஜியை அவமதித்து வருகின்றனர் என சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.

போட்டி போட்டு அவமதிப்பு

மராட்டிய சுற்றுலா துறை மந்திரி மங்கல் பிரதாப் லோதா, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. எனவே அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பா.ஜனதா தலைவர் சரத்பதி சிவாஜியை போட்டி போட்டு அவமதித்து வருகின்றனர் என குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

பா.ஜனதா தலைவர்கள் சத்ரபதி சிவாஜியை போட்டி போட்டு அவமதித்து கொண்டு இருக்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். இந்த பெட்டி அரசாங்கத்துக்கும், கவர்னருக்கும் இடையே யார் சிவாஜியை அதிகம் அவமதிக்கிறார் என்ற போட்டி நடந்து வருகிறது.

மக்கள் ஆதரவு

கவர்னரை நீக்குவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேசுவோம். குறைந்தபட்சம் சுற்றுலாத்துறை மந்திரி மங்கல் பிரதாப் லோதாவுக்காவது சிவாஜியின் வரலாறு தெரிந்து இருக்க வேண்டும். அவர் சிவாஜியை ஒரு நேர்மறை இல்லாதவருடன் ஒப்பிடுகிறார். ஏக்நாத் ஷிண்டே வேண்டுமானால் மராட்டியத்தின் பெருமைக்காக டெல்லி செல்லலாம். சத்ரபதி சிவாஜியை அவமதித்தால் அமைதியாக இருக்க வேண்டும் என தீர்மானம் எடுத்து கொள்ளலாம். ஆனால் நாங்கள் அதை பொறுத்து கொள்ள மாட்டோம்.

40 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை விட்டு விலகி கட்சி தலைவர்களுக்கு துரோகம் செய்தனர். ஆனாலும் மக்கள் எங்களுடன் உள்ளனர். மக்களின் ஆதரவுடன் அவர்களுக்கு பதில் அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story