பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லை - ஜெய்ராம் ரமேஷ்
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் முற்றிலுமாக அரசியலமைப்பில் நம்பிக்கை கிடையாது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நமது இந்திய அரசியலமைப்பு சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் 1949-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய நாள் அரசியல் சாசன நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், பாஜக அரசியலமைப்பு நாளை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் முற்றிலுமாக அரசியலமைப்பில் நம்பிக்கை கிடையாது. அவர்கள் அரசியலமைப்பை மதிப்பதும் இல்லை, கண்டு கொள்வதும் இல்லை. இப்போது அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் "வித்தையில்" ஈடுபடுகின்றனர்" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
Related Tags :
Next Story