ராமர் பாலம் குறித்து தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - சத்தீஷ்கர் முதல்-மந்திரி


ராமர் பாலம் குறித்து தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - சத்தீஷ்கர் முதல்-மந்திரி
x

ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.

இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு சத்தீஷ்கர் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் கூறியதாவது:-

ராமர் பாலத்துக்கு ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் ஆட்சியின்போது கூறியதற்கு எங்களை 'ராமருக்கு எதிரி' என்று பா.ஜனதா கூறியது. தற்போது, ராமரின் பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் அரசு, அதே கருத்தை தெரிவித்துள்ளது. அவர்களை என்ன என்று சொல்வது?

ராமர் பாலம் குறித்து மக்களை தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது. அவர்கள் ராமரின் உண்மையான பக்தர்களாக இருந்தால், அரசை விமர்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story