முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்..!


முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்..!
x

முத்தமிட்டபோது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டி 17 வயது சிறுமியை அதே வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

மும்பை,

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் பயின்று வருகிறார். அவருடன் 17 வயதான சிறுவன் பழகி வந்துள்ளார். சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இருவரும் முத்தம் கொடுப்பதுபோல் செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி, வெளியிடுவதாக மிரட்டி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமி ஒருமுறை கல்லூரிக்கு வரும்போது, சிறுவன் வெளியே செல்ல என்னுடன் வரவேண்டுமென வற்புறுத்தியுள்ளான்.

இதனை சிறுமியின் தோழி ஒருவர் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கைதுசெய்த போலீசார், சிறுவனை டோங்ரி குழந்தைகள் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பினர்.


Next Story