மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடக்கம்


மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடக்கம்
x

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்று வருகிறது.

டெல்லி,

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன காா்கே தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் 39 பேர், 32 நிரந்தர அழைப்பாளர்கள், 13 சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன காா்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கட்சியின் நிலைப்பாடு, தற்போதைய அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பாா்க்கப்படுகிறது.


Next Story