அரசியலமைப்பின் அடிப்படையே நெருக்கடியை சந்தித்துள்ளது - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

இந்திய அரசியலமைப்பு சாசன தினம் இன்று கொண்டாடப்படுகிறது
புதுடெல்லி,
இந்திய அரசியல் சாசனம் சட்டம் 1949 நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தினம் இந்திய அரசியலமைப்பு சாசன தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று இந்திய அரசியல் அமைப்பு சாசன தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் சாசன தினமான இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
70 ஆண்டு காலத்தில் பல்வேறு சோதனைகளை கடந்து அரசியலமைப்பு வெற்றிகரமாக நிலைநின்றுள்ளது. ஆனால், இன்று அந்த அரசியலமைப்பின் அடிப்படையே நெருக்கடியை சந்தித்துள்ளது. எழுத்திற்கு பின்னால் உள்ள அரசியலமைப்பின் ஆன்மாவின் இருப்பே நெருக்கடியை சந்தித்து வருகிறது.
மத்திய அரசு முழுமையாக சரணடைந்துவிட்டது. மத்திய அரசின் அமைப்புகளை சமூக சேவை என்ற போர்வையில் வெறுப்புணர்வை பரப்பும் நோக்கம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயங்குகின்றது.