டெல்லியில் கடும் குளிர் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு 15-ந்தேதி வரை விடுமுறை அளிக்க அரசு அறிவுறுத்தல்


டெல்லியில் கடும் குளிர் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு 15-ந்தேதி வரை விடுமுறை அளிக்க அரசு அறிவுறுத்தல்
x

தனியார் பள்ளிகளுக்கு வரும் 15-ந்தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

வட மாநிலங்களில் குளிர் காலங்களில் வழக்கமாக அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இமாச்சல பிரதேசம், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. சாலைகளில் பனிமூட்டம் காரணமாக சில விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இதனிடையே டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை முடிந்து 9-ந்தேதி(நாளை) முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் தற்போது குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு வரும் 15-ந்தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் இன்று வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச அளவில் பதிவாகி உள்ள நிலையில், டெல்லி அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story