டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்


டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
x

கோப்புப்படம்

டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

புதுடெல்லி,

நேபாள நாட்டில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் இருந்தது. அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். தற்போது மட்டுமல்ல, டெல்லியில் இதற்கு முன்பும் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி தேசிய நில அதிர்வு மைய நிபுணர்கள் தெரிவிக்கையில், 'டெல்லி இமயமலைக்கு அருகில் இருப்பதால் இது நில அதிர்வு செயலில் உள்ள மண்டலமாக கருதப்படுகிறது. நில அதிர்வு மண்டல வகை பிரிவில் டெல்லி 4-வது பிரிவில் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

1 More update

Next Story