டெல்லியில் இந்த மாதத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி


டெல்லியில் இந்த மாதத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி
x

டெல்லியில் இந்த மாதத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இந்த மாதத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது என்று டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

எனினும், இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்த ஆண்டு 35 மலேரியா மற்றும் 9 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன என்று டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில், டெல்லியில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story