இம்பால் விமான நிலையத்தில் ரூ.1.99 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்


இம்பால் விமான நிலையத்தில் ரூ.1.99 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்
x

தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்பால்,

இம்பால் விமான நிலையத்தில் சுமார் ரூ.1.99 கோடி மதிப்பிலான 19 தங்க பிஸ்கட்டுகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பயணி உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், நம்பகமான தகவலின் அடிப்படையில் இம்பாலின் கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இம்பால் விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்திற்குச் சென்றனர், அங்கு ஒரு பயணி மற்றும் ஒரு கோச் டிரைவர் என இரண்டு நபர்களை சில அறியப்படாத சட்டவிரோதப் பொருட்களுடன் இண்டிகோ ஏர்லைன்சின் பாதுகாப்புப் பணியாளர்கள் கைது செய்தனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கைது செய்யப்பட்ட இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story