கடும் பனிப்பொழிவு: டெல்லியில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை


கடும் பனிப்பொழிவு: டெல்லியில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை
x

கடும் பனிப்பொழிவு எதிரொலியாக டெல்லியில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. அதிகாலைப்பொழுதில் ஆட்களை மறைக்கும் அளவுக்கு கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த காலக்கட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை டெல்லி கல்வி இயக்குனரகம் நேற்று மாலை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story