உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா யார் பக்கம்? - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் 'பளிச்' பதில்


உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா யார் பக்கம்? - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் பளிச் பதில்
x

உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா யார் பக்கம் என்ற கேள்விக்கு வெளியுறவுத்துறை மந்திரி பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 290-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

அதேவேளை, உக்ரைன் - ரஷியா இடையேயான போரில் இந்தியா என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது என்பதை இந்தியா பல முறை தெளிவுபடுத்தி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பக்கேற்றார். அப்போது அவரிடம் உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா யார் பக்கம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், உக்ரைன் - ரஷியா போரில் இந்திய அரசு இந்திய மக்களின் நலன் சார்ந்த பக்கத்தை எடுத்துள்ளது.

போரின் தாக்கம் உணவு, எரிபொருள், உரத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்கரீதி மூலம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர நிறைய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

போர் வளர்ந்து வரும் நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் இன்று இந்தியாவும், பிரதமர் மோடியும் உலகின் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் குரலாக உருவெடுத்துள்ளனர்' என்றார்.

இந்தியா தலைமையில் உக்ரைன் - ரஷியா இடையே அமைதிபேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய சூழ்நிலையில் இந்த கேள்விக்கு இப்போது பதிலளிப்பது கடினம்' என்றார்.


Next Story