அயோத்தி, சி.ஏ.ஏ. விவகாரத்தை ஐ.நா.சபையில் எழுப்பிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி


அயோத்தி, சி.ஏ.ஏ. விவகாரத்தை ஐ.நா.சபையில் எழுப்பிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 16 March 2024 12:03 PM IST (Updated: 16 March 2024 1:32 PM IST)
t-max-icont-min-icon

உலகமே வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் தேங்கி கிடக்கும் ஒரு நாடு, தங்கள் கொண்டு வந்த தீர்மானத்தில் பழைய விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறது என்று இந்தியா கூறியது.

கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மார்ச் 11 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. ஆனால் சிஏஏ சட்டத்தில் ஏன் முஸ்லிம்களுக்கு இடமில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் அவையில், அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தையும், சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கும் விஷயத்தையும் பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, உலகமே வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் தேங்கி கிடக்கும் ஒரு நாடு, இறுதியாக தங்கள் கொண்டு வந்த தீர்மானத்தில் பழைய விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறது" என்று பாகிஸ்தானை சாடியுள்ளது.

1 More update

Next Story