பதற்றம் நீடிப்பு: மணிப்பூரில் இணைய சேவை முடக்கம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு


பதற்றம் நீடிப்பு: மணிப்பூரில் இணைய சேவை முடக்கம்  31 ஆம் தேதி வரை நீட்டிப்பு
x

image courtesy: PTI

சமூகவலைத்தளங்கள் மூலம் தவறான தகவல் பரவுவதை தடுக்க இணையத்தை முடக்கிய மணிப்பூர் அரசு.

இம்பால்,

மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும், பழங்குடி அல்லாத சமுகங்களும் உள்ளன. இதனிடையே, அம்மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் மே 4ஆம் தேதி கலவரமாக மாறியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது.

கலவரம் குறித்து தவறான செய்திகள் பரவுவதை தடுக்க அம்மாநில அரசு மே 4 ஆம் தேதி இணையதள சேவைகளை நிறுத்தியது. தற்போது வரை பதற்றம் நீடிப்பதால் மே 31 வரை இணையதள சேவைகளுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல் மற்றும் தவறான வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது' என அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கபட்டுள்ளது.


Next Story
  • chat