பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு...!
மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில், இன்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி இன்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளார்.
Related Tags :
Next Story