மெஸ்சி, நெய்மருக்கு ஆற்றுக்குள் வைக்கப்பட்ட கட் அவுட்களை அகற்ற உத்தரவு..!


மெஸ்சி, நெய்மருக்கு ஆற்றுக்குள் வைக்கப்பட்ட கட் அவுட்களை அகற்ற உத்தரவு..!
x

கோழிக்கோட்டில் மெஸ்சி, நெய்மருக்கு கேரள கால்பந்து ரசிகர்கள் ஆற்றுக்குள் பிரமாண்ட கட் அவுட் வைத்தனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்சு, இத்தாலி நாடுகளின் கால்பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்துள்ளனர்.

அந்த வகையில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட்-அவுட் அமைத்தனர். இந்த கட்-அவுட்டை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது வைரலானதை தொடர்ந்து மற்ற வீரர்களின் ரசிகர்களும் இதுபோல கட்-அவுட் அமைக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று பிரேசில் கால்பந்து ஜாம்பவன் நெய்மருக்கு அவரது ரசிகர்கள் அதே செருபுழா ஆற்றில் கட்-அவுட் அமைத்தனர். இந்த கட்-அவுட் மெஸ்சியின் கட்-அவுட்டை விட 10 அடி உயரமாக 40 அடியில் நிறுவப்பட்டது. ஆற்றுக்குள் அடுத்தடுத்து மெஸ்சி, நெய்மரின் கட்-அவுட்கள் காணப்படுவது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து வழக்கறிஞர் ஒருவரின் புகாரையடுத்து கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புள்ளவூர் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கட்-அவுட்டை அகற்ற ஊராட்சி செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story