'நான் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியுள்ளேன்' - ரகசியத்தை உடைத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி


நான் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியுள்ளேன் - ரகசியத்தை உடைத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
x

வழக்கறிஞர்களின் இசையை கேட்டபின் வீட்டிற்கு சென்றும் இசையை கேட்பேன் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

பனாஜி,

இந்திய பார் கவுன்சில் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பில் இந்திய-சர்வதேச சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் முதல் கல்வி அமர்வை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பேசியதாவது:-

நிறைய பேருக்கு இது தெரியாமல் இருக்கலாம் ஆனால், நான் எனது இளம் வயதில் அனைத்திந்திய வானொலியில் (ஆல் இந்திய ரேடியோ) ரேடியோ ஜாக்கியாக (ரகசிய பகுதி நேர வேலையாக) வேலை செய்துள்ளேன். ஆல் இந்தியா ரேடியோவில் 'பிளே இட் கூல்', 'ஏ டேட் வித் யூ', 'சண்டே ரெக்யூவஸ்ட்' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.

வழக்கறிஞர்களின் இசையை கேட்டுவிட்டு வீட்டிற்கு சென்று இன்னும் நான் இசையை கேட்பேன். இசை மீதான எனது காதல் தினமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எப்போதும், காதிற்கு இசையாக இல்லாத வழக்கறிஞர்களின் இசையை கேட்டு முடிந்தவுடன் நான் வீட்டிற்கு சென்ற உடன் காதிற்கு இசையாக உள்ள இசையை நான் கேட்பேன்' என்று நகைச்சுவை உணர்வுடன் கூறினார்.


Next Story