மும்பை: சொத்து தகராறில் தாயைக் கொன்று, உடலை ஆற்றில் வீசிய நபர் கைது
மும்பையில் சொத்து தகராறில் தாயைக் கொன்று, உடலை ஆற்றில் வீசிய நபர் கைதுசெய்யப்பட்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், சொத்து தகராறில், தனது 74 வயது தாயின் தலையை பலமுறை பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொன்றதற்காக, நபர் ஒருவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை இரவு, கல்பதரு சொசைட்டியின் பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், 74 வயதான மூதாட்டி ஒருவர் காணாமல் போனதாகக் கூறி, ஜூஹூ காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
அவரது மகன் பன்வேலில் இருந்தபோது மூதாட்டியின் மொபைல் இருப்பிடம் அவரது கட்டிடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், மூதாட்டியின் மகனையும் அவருடைய வேலைக்காரனையும் அழைத்து விசாரித்தனர்.
விசாரணையின் போது, அவர் தனது தாயின் தலையை பலமுறை பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொன்றதற்காக தெரிவித்தார். பின்னர் அவரது உடலை ராய்காட் மாவட்டத்தில் உள்ள மாத்தேரான் அருகே ஆற்றில் வீசியதாக தெரிவித்தார். சொத்துத்தகராறில் இந்த கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் மகனையும், அவருடைய வேலைக்காரனையும் கைதுசெய்த போலிசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.