தரவுகள் இல்லாத பொறுப்பற்ற அரசு; மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்


தரவுகள் இல்லாத பொறுப்பற்ற அரசு; மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்
x

புள்ளிவிவரங்கள் இல்லாததுதான் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. என்டிஏ என்பது “நோ டேட்டா அவைளபிள்”. எந்தப் பதிலும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி சாடியுள்ளார்.

"No Data Available" Government: Rahul Gandhi's Jibe At Centreகொரோனாவில் உயிரிழந்த அங்கன்வாடி ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்த தரவுகள் இல்லை என மத்திய அரசு பதிலளித்து இருந்தது.

இது தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) அரசு என்பதை, தரவுகள் இல்லாத (என்.டி.ஏ.) அரசு என தனது டுவிட்டர் தளத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அந்தவகையில், 'ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை. போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழக்கவில்லை. கொரோனா பொதுமுடக்கத்தின்போது நடந்தே சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழக்கவில்லை. கும்பலால் யாரும் அடித்துக்கொல்லப்படவில்லை. எந்த பத்திரிகையாளரும் கைது செய்யப்படவில்லை. இவற்றை நீங்கள் நம்ப வேண்டும் என்று தரவுகள் இல்லாத (என்.டி.ஏ.) அரசு விரும்புகிறது' என கூறியுள்ளார்.

மேலும் அவர், 'தரவுகள் இல்லை. பதில் இல்லை. பொறுப்பும் இல்லை' என்றும் சாடியிருந்தார்.


Next Story