ஜனநாயகத்தில் எந்த அமைப்பும் சரியானது அல்ல - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி


ஜனநாயகத்தில் எந்த அமைப்பும் சரியானது அல்ல - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
x

‘அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைபடுத்தும் உண்மையுள்ள வீரர்கள் நாம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அரசியலமைப்பு நாள் கொண்டாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பார் கூட்டமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டிஎஸ் சந்திரசூட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அரசியலமைப்பு கொண்ட ஜனநாயகத்தில் எந்த அமைப்பும் சரியானது அல்ல. அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கனவே உள்ள கட்டமைப்பிற்குள் நாம் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைபடுத்தும் உண்மையுள்ள வீரர்கள் நாம்' என்றார்.

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜீயம் நடைமுறைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story