டெல்லியில் நாளை முதல் கனமழை குறையும்: வானிலை மையம் தகவல்
தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் தற்போது வெள்ளத்தில் மிதப்பதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் 2007ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் தற்போது வெள்ளத்தில் மிதப்பதாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி தென் கிழக்கு, தெற்கு டெல்லி உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 40 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் அடுத்த இரண்டு நாட்களில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கனமழை காரணமாக டெல்லியில் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்கள் அடிப்படை வசதிகளை பெற முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், டெல்லியில் நாளை முதல் கனமழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. அக்டோபர் 10 முதல் தேசிய தலைநகரில் குறிப்பிடத்தக்க மழை பெய்யாது என்றும், இருப்பினும், தூறல் அல்லது லேசான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.