ஒடிசா ரெயில் விபத்து: இந்திய வரலாற்றில் மிக கொடிய ரெயில் விபத்துக்கள்...!


ஒடிசா ரெயில் விபத்து: இந்திய வரலாற்றில் மிக கொடிய  ரெயில் விபத்துக்கள்...!
x
தினத்தந்தி 3 Jun 2023 5:14 AM GMT (Updated: 3 Jun 2023 7:21 AM GMT)

ஒடிசா ரெயில் விபத்து சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரெயில் விபத்துகளில் ஒன்றாகும்

புதுடெல்லி

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்துகொண்டிருந்தது. அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது.

பெங்களூரு-ஹவுரா ரெயில் நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட ரெயிலின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன.

அப்போது, அந்த தண்டவாளத்தில் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனால், தடம்புரண்ட பெங்களூரு-ஹவுரா ரெயில் பெட்டிகள் மீது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் விபத்துக்குள்ளான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்து உள்ளது.மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரெயில் விபத்துகளில் ஒன்றாகும் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசா ரெயில் விபத்து செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 280 பேர் பலி விபத்து நடந்தது எப்படி...?

ஒடிசா ரெயில்கள் விபத்து: பாலசோர் மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய குவிந்து வரும் கூட்டம்

உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்துகளில் ஒன்றாக பதிவான ஒடிசா ரெயில் விபத்து

ஒடிசா ரெயில் விபத்து நடந்த இடத்தில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு

கோர ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது - ஆய்வுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

ரெயில் விபத்து செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - எடப்பாடி பழனிசாமி

இந்தியாவில் நடந்த கொடிய ரெயில் விபத்துக்களைப் பார்ப்போம்:

1. பீகார் ரெயில் விபத்து இது 500 முதல் 800 இறப்புகளுடன் இந்தியாவின் மிக மோசமான ரெயில் விபத்துகளில் ஒன்றாகும். ஜூன் 6, 1981 அன்று சஹர்சா பீகார் அருகே பாக்மதி ஆற்றில் பயணிகள் ரெயில் விழுந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

2.பிரோசாபாத் ரயில் விபத்து : உத்தரபிரதேசத்தில் பிரோசாபாத் அருகே காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதியதில் குறைந்தது 358 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் ஆகஸ்ட் 20, 1995 அன்று நடந்தது.

3. அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் விபத்து : ஆகஸ்ட் 2, 1999 அன்று கெய்சலில் பிரம்மபுத்ரா மெயில் மீது ஆவாத்-அசாம் எக்ஸ்பிரஸ் மோதியதில் குறைந்தது 268 பேர் பலியானார்கள் மற்றும் சுமார் 359 பேர் காயமடைந்தனர்.

ககவுகாத்திக்கு செல்லும் அவத் அசாம் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. கைசல் என்ற ஸ்டேஷனில். அசாமில் இருந்து இந்திய வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு பிரம்மபுத்திரா மெயில் எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

4. கன்னா ரெயில் விபத்து: நவம்பர் 26, 1998 அன்று ஜம்மு தாவி-சீல்டா எக்ஸ்பிரஸ், பஞ்சாபின் கன்னாவில் அமிர்தசரஸ் செல்லும் எல்லைப்புற தங்கக் கோயில் மெயிலின் தடம் புரண்ட மூன்று பெட்டிகள் மீது மோதிய சம்பவம் நிகழ்ந்தது. இந்த பயங்கர ரெயில் விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர்.

5. ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கெமசூலி மற்றும் சர்திஹா இடையே மும்பை செல்லும் ஹவுரா குர்லா லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரசில் மாவோயிஸ்டுகள் நடத்திய சந்தேகத்திற்குரிய தாக்குதலில் குறைந்தது 170 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2010 மே 28 அன்று நடந்தது.

6. உத்தர் பங்கா எக்ஸ்பிரஸ் மற்றும் வனஞ்சல் எக்ஸ்பிரஸ் விபத்து: ஜூலை 19, 2010 அன்று, மேற்கு வங்காளத்தின் சைந்தியாவில் உத்தர் பங்கா எக்ஸ்பிரஸ் மற்றும் வனஞ்சல் எக்ஸ்பிரஸ் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 63 பேர் இறந்தனர் மற்றும் 165 பேர் காயமடைந்தனர்.

7. 2011, சாப்ரா-மதுரா எக்ஸ்பிரஸ் விபத்து: ஜூலை 7, 2011 அன்று, உத்தரபிரதேசத்தில் எட்டா மாவட்டம் அருகே சாப்ரா-மதுரா எக்ஸ்பிரஸ் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பிற்பகல் 1.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆளில்லா லெவல் கிராசிங்கில். ரெயில் மீது பேருந்து மோஒதியதால் சுமார் அரை மைல் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.

8. 2012, ஹூப்ளி-பெங்களூரு ஹம்பி எக்ஸ்பிரஸ் விபத்து : மே 23, 2012 அன்று, ஹூப்ளி-பெங்களூரு ஹம்பி எக்ஸ்பிரஸ் ஆந்திரப் பிரதேசம் அருகே சரக்கு ரெரயில் மீது மோதியது. விபத்தைத் தொடர்ந்து, நான்கு பெட்டிகள் தடம் புரண்டன, அவற்றில் ஒன்று தீப்பிடித்து, சுமார் 25 பயணிகள் பலியானார்கள் மற்றும் பலர் கருகினர். இந்த விபத்தில் 43 பேர் காயம் அடைந்தனர்.

9. 2012, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்து : ஜூலை 30, 2012 அன்று, டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

10. 2014, கோரக்தாம் எக்ஸ்பிரஸ்: மே 26, 2014 அன்று, கோரக்பூரை நோக்கிச் சென்ற கோரக்தாம் எக்ஸ்பிரஸ் கலிலாபாத் ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட சரக்கு ரெயிலில் மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

11. 2015, ஜனதா எக்ஸ்பிரஸ் விபத்து: மார்ச் 20, 2015 அன்று டேராடூனில் இருந்து வாரணாசி நோக்கிப் பயணித்த ஜனதா எக்ஸ்பிரsல் ஒரு பெரிய விபத்து நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள பச்ரவான் ரயில் நிலையம் அருகே ரெயிலின் என்ஜின் மற்றும் அடுத்தடுத்த பெட்டிகள் இரண்டு தடம் புரண்டதில் 30 பேர் பலியானார்கள் மற்றும் சுமார் 150 பேர் காயமடைந்தனர்.

12. 2016, பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் விபத்து : 19321 இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் நவம்பர் 20, 2016 அன்று கான்பூரின் புக்ராயன் அருகே தடம் புரண்டதில் குறைந்தது 150 பேர் பலியானார்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

13. 2017 கலிங்கா-உத்கல் எக்ஸ்பிரஸ் விபத்து: ஆகஸ்ட் 19, 2017 அன்று, ஹரித்வார் மற்றும் பூரி இடையே ஓடும் கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள கட்டவுலி அருகே விபத்துக்குள்ளானது. ரெயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 21 பயணிகள் உயிரிழந்தனர், 97 பேர் காயமடைந்தனர்.

14. 2017, கைபியத் எக்ஸ்பிரஸ்: ஆகஸ்ட் 23, 2017 அன்று டெல்லி செல்லும் கைபியத் எக்ஸ்பிரஸின் ஒன்பது ரெயில் பெட்டிகள் உத்தரப் பிரதேசத்தின் அவுரியா அருகே தடம் புரண்டதில் குறைந்தது 70 பேர் காயமடைந்தனர். இந்த ரெயில் விபத்தில் பயணிகள் யாரும் இறக்கவில்லை.

15. 2022, பிகானேர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் விபத்து: ஜனவரி 13, 2022 அன்று, மேற்கு வங்கத்தின் அலிபுர்தாரில் பிகானேர்-கவுத்தி எக்ஸ்பிரஸின் குறைந்தது 12 பெட்டிகள் தடம் புரண்டதில் ஒன்பது பேர் பலியானார்கள் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.


Next Story