இந்தியாவுடன் நல்லுறைவை விரும்புகிறோம்; பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்


இந்தியாவுடன் நல்லுறைவை விரும்புகிறோம்; பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
x
தினத்தந்தி 19 Aug 2022 5:07 PM IST (Updated: 19 Aug 2022 5:19 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாகவும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.

இஸ்லமபாத்,

இந்தியா- பாகிஸ்தான் இடயேயான உறவில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. கடந்த 2019- ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்நாடுடன் சுமூக உறவை மேம்படுத்த முடியும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " பரஸ்பர நம்பிக்கை, நீதி, சமத்துவம் ஆகிய கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவு ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்புகிறது.

ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம், மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் அடிப்படையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகங்கள் உதவி அளிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். தெற்கு ஆசியா பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவுவது அவசியமானது" என்றார்.

1 More update

Next Story