பெங்களூருவில் தொழிற்சாலையில் 4,160 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்


பெங்களூருவில் தொழிற்சாலையில் 4,160 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
x

பெங்களூருவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு:

பெங்களூரு தாசரஹள்ளி மண்டலத்தில் உள்ள ஷெட்டிஹள்ளி வார்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள், பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வார்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, அந்த தொழிற்சாலையில் இருந்து 4,160 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் 7 சரக்கு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தாசரஹள்ளி மண்டல இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.


Next Story