நடிகை ராகிணி திவேதிக்கு கையில் காயம்


நடிகை ராகிணி திவேதிக்கு கையில் காயம்
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:46 PM GMT)

சென்னையில் நடந்த படப்பிடிப்பில் நடிகை ராகிணி திவேதிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராகிணி திவேதி. இவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் காட்டன்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் இருந்து வருகிறார். இதையடுத்து அவர் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது அவர் 'கமாண்டோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்படிப்பு சென்னையில் நடந்து வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பின் போது நடிகை ராகிணி திவேதிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த தகவலை நடிகை ராகிணி திவேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, சென்னையில் நடந்த கமாண்டோ படப்பிடிப்பில் தனது கையில் காயம் ஏற்பட்டதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் டாக்டர்களின் அறிவுரைப்படி தான் 4 நாட்கள் ஓய்வெடுத்து வருவதாகவும், அதனால் தற்காலிகமாக படப்பிடிப்புக்கு ஓய்வளித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கையில் கட்டு போட்ட படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் விரைவாக குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story