பெங்களூரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்; மாணவி, 2 மாணவர்கள் கைது


பெங்களூரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்; மாணவி, 2 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக மாணவி, 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்

கர்நாடகத்தில் சமீபகாலமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சிக்கமகளூருவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெங்களூருவிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நேற்று முன்தினம் மாலை ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாக நிகழ்ச்சியை கொண்டாடினர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு மாணவி, 2 மாணவர்கள் திடீரென பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற மாணவர்கள் மாணவியையும், 2 மாணவர்களையும் பிடித்து தாக்கியதாக தெரிகிறது. மேலும் 'ஜெய் ஹிந்த், ஜெய் கர்நாடகா' என்று சொல்லும்படி மாணவி, 2 மாணவர்களிடம் சக மாணவர்கள் கூறினார்கள். அதன்படி மாணவியும், மாணவர்களும் கூறி இருந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவி, 2 மாணவர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

கைது -விடுவிப்பு

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக ஒரு மாணவி, 2 மாணவர்கள் ஆகியோர் மீது மாரத்தஹள்ளி போலீசார், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (கலகம் ஏற்படுத்தும் நோக்கில் கோஷம்), 505(1) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து இருந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகவும், இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் 3 பேரும் கண்ணீர் மல்க கூறினர்.

அதுபோல மாணவர்கள், மாணவியின் பெற்றோரும் போலீஸ் நிலையத்தில் மன்னிப்பு கேட்டனர். 3 ேபருேம கல்லூரியில் படித்து வருவதால், அவர்களது படிப்பு பாதிக்கப்படக்கூடாது எனக் கருதி ேபாலீஸ் நிைலய ஜாமீனில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

தாவணகெரே மாணவி

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்கள் பற்றிய விவரம் தெரியவந்துள்ளது. அதாவது மாணவி ரியா ரவிச்சந்திரன் என்பதும், மாணவர்கள் ஆர்யன், தினகர் என்பதும் தெரியவந்தது.

மாணவி ரியா கர்நாடக மாநிலம் தாவணகெரேயை சேர்ந்தவர் என்பதும், மாணவர் ஆர்யன் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் என்பதும், தினகர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர்கள் 3 பேரின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மீண்டும் விசாரணை

இந்த நிலையில் நேற்று காலை மாணவி, 2 மாணவர்களும் விசாரணைக்கு மீண்டும் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் போலீசார், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது தொடர்பாக துருவி, துருவி கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர்கள், பிரபலமாக வேண்டும் என்பதற்காக கோஷம் எழுப்பியதாக கூறினர். இதையடுத்து விசாரணைக்கு அழைக்கும் போது போலீசில் ஆஜராக வேண்டும் என்று அவர்களை போலீசார் கூறி அனுப்பிவைத்தனர். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story