துபாய் சென்ற விமானத்தில் பாம்பு: விசாரணைக்கு உத்தரவு
விமானத்தில் சரக்கபெட்டகம் வைக்கும் பகுதியில் பாம்பு இருந்தது கண்டறியப்பட்டது.
புதுடில்லி:
ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து துபாய் நோக்கி புறப்பட்டு இன்று துபாய் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தது. அப்போது விமானத்தில் சரக்கபெட்டகம் வைக்கும் பகுதியில் சரக்குகளை எடுத்த போது பாம்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக உரிய..விசாரணை நடத்தி அறிக்கை தர சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்குனர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story