மின்துறை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதை வரவேற்கிறேன்; டி.கே.சிவக்குமார் பேட்டி


மின்துறை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதை வரவேற்கிறேன்; டி.கே.சிவக்குமார் பேட்டி
x

நான் மந்திரியாக இருந்தபோது நடந்த மின்துறை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதை வரவேற்கிறேன் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெலகாவி:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

என்னையும், சோனியா, ராகுல் காந்தியையும் குற்றவாளிகளை போல் பா.ஜனதாவினா் பேசுகிறார்கள். அரசியல் ரீதியாக பலமாக வளருகிறவர்களுக்கு எதிராக இவ்வாறு ெபாய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். பா.ஜனதாவினர் தங்களுக்கு அரசியல் ரீதியாக யார் அச்சுறுத்தலாக திகழ்கிறார்களோ அவர்களை இலக்காக வைத்து தொல்லை தருகிறார்கள்.எங்கள் கட்சியை சேர்ந்த வினய்குல்கர்னி மீது கொலை குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக அவரை சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். நான் மின்துறை மந்திரியாக இருந்தபோது நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.இதுபற்றி விசாரணை நடத்தட்டும். அதை நான் வரவேற்கிறேன். பா.ஜனதா ஆட்சியில் எந்தெந்த ஊழல்களை செய்துள்ளனர் என்பது எனக்கு தெரியும். நேரம் வரும்போது நான் அனைத்து தகவல்களையும் கூறுகிறேன். அரசு விழாவுக்கு ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆசிரியர்கள் எதற்காக விழாவுக்கு வர வேண்டும்?.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story