பாடப்புத்தகத்தில் நீக்கம்: காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்

என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில் நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தின் கீழ்வரும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி, இந்து முஸ்லிம் ஒற்றுமை. ஆர்.எஸ்.எஸ். தடை பற்றிய வரிகள் நீக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் தலைவர் கார்கே கூறியதாவது:-

நீங்கள் பாடப்புத்தகங்களில் மாற்றங்களைச் செய்யலாம். ஆனால் இந்தியாவின் வரலாற்றை மாற்றி விட முடியாது. இது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். முயற்சி. அவர்கள் விரும்பும் வரை முயற்சிக்கட்டும். ஆனால் அவர்களால் வரலாற்றை அழித்து விட முடியாது என்று அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com