

புதுச்சேரி,
புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 41 பேர், காரைக்காலில் 17 பேர், மாஹேவில் 20 பேர், ஏனாமில் 1 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,22,282 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் புதுச்சேரியில் இதுவரை பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,805 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 85 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,548 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 929 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.